2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மரண தண்டனை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, காத்தான்குடியில் 8 வயது சிறுமியான எஸ்.பாத்திமா சீமா, துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் சிறுமியை கொலை செய்ததாக கூறப்படும் ஐ.எம். றமழான் என்ற சந்தேக நபருக்கு மரண தண்டனை வழங்கக்கோரி காத்தான்குடியில் இன்று வெள்ளக்கிழமை (12) ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடைபெற்றது.

காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும் ஆ பள்ளிவாயலில் ஜும் ஆத்தொழுகையின் பின்னர் காத்தான்குடி பிரதான வீதியில் ஒன்று கூடிய பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சுலோகங்களை தாங்கி பேரணியாக காத்தான்குடி பிரதான வீதி வழியாக காத்தான்குடி பிரதேச செயலகம் வரை சென்றனர்.

ஆர்ப்பாட்ட பேரணியில் சென்றவர்கள் சிறுவர் துஷ்பிரயோகத்தை நிறுத்து, சிறுவர்களாகிய எங்கள் விடயத்தில் அக்கறை செலுத்துங்கள், சட்டத்துறையே எதிரிக்கு துணைபோகாதே, சட்டத்தரணிகளே கொலை காரர்களுக்கு ஆதரவாக உதவி செய்யாதீர்கள், கொலை காரனுக்கு கருணை காட்டதீர்கள் போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை தாங்கியிருந்தனர்.

ஆர்ப்பாட்ட பேரணி முடிவில் காத்தான்குடி பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஆர்.சுந்தராஜாவிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X