2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆற்றுப்பகுதிகளில் களப் பரிசோதனை

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 12 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமுலை மயிலவட்டுவான் ஆற்றுப்பகுதி, வீரக்கட்டு ஆற்றுப்பகுதி, கிரான்புல்பட்டு ஆற்றுப்பகுதி,.புளியடித்துறை ஆற்றுப்பகுதி மற்றும் சித்தாண்டி சந்தனமடு ஆற்றுப்பகுதிகளில் மண் அகழ்வு மேற்கொள்வதால் ஏற்படும் சுற்றாடல் பிரச்சினைகள் தொடர்பில் நேற்றைய தினம் களப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பிட்ட பிரதேசங்களில் மண்அகழ்வு மேற்கொள்வதினால் சுற்றாடல் பிரச்சனைகள் பல ஏற்படுவதாக கடந்த 2014.08.26ஆம் திகதி செங்கலடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பெரும்போக விவசாய அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராஜசிங்கம் மற்றும் ஏனைய உறுப்பினர்களும் சமர்ப்பித்த கோரிக்கைக்கமைவாக கள ஆய்வு இடம்பெற்றது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தின் பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் எம்.ஆர்.எம். பாரீஸ்இ மட்டக்களப்பு மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகாரசபை பொறுப்பதிகாரி எஸ். கோகுலன் உட்பட பிரதேசத்தில் மண் அகழ்வினை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் என பலர் பங்கு கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X