2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

குடிநீர் போத்தல்கள் கையளிப்பு

Gavitha   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான முழுமையான தீர்வுகளைக் கொடுக்கமுடியாதுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நலன் விரும்பிகள் இணைந்து ஒரு தொகை குடிநீர் போத்தல்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் வெள்ளிக்கிழமை (12) கையளித்துள்ளனர்.

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா,  கணக்காளர் எஸ்.பிரேம்குமார், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினரும்  கலந்து கொண்டனர்.

குடிநீர்போத்தல்களை அவசியத் தேவையுள்ள பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் அனைத்தையும் அரசாங்கத்தினாலும் நிறுவனங்களினாலும் நிறைவு செய்யமுடியாது, இது போன்ற நலன் விரும்பிகள் முன்வருவது மகிழ்வைத்தருவதாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X