2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் டெல் உற்பத்திகள் அறிமுகம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக டெல் (DELL) நிறுவனத்தின் புதிய  உற்பத்திகள் தொடர்பான அறிமுகமும் சம்சூங் ஐ.டி டெல் உற்பத்திகளுக்கான,விநியோகஸ்தரை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் வெள்ளிக்கிழமை (12) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் சுற்றுலா விடுதியில் நடைபெற்றது.

இதன்போது, அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், நிறுவனங்களின் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் தென் ஆசியப்பிராந்திய விற்பனை முகாமையாளர் றியாசி சம்முதீன், டெல் நிறுவனத்தின் வியாபார முகாமையாளர் ஷெஹான் மனதுங்க, சம்சூங் ஐ.டி நிறுவனத்தின் பொது முகாமையாளர் ஞானம் செல்லத்துரை, விற்பனை முகாமையாளர் சரித்த பெரேரா உள்ளிட்டோர் விளக்கங்களை வழங்கினர்.

மைக்ரோ சொப்ற் நிறுவனத்தின் தென்ஆசியப்பிராந்திய விற்பனை முகாமையாளர் றியாசி சம்முதீன் தற்போதுள்ள இணையக் குற்றங்கள், இணையக் குற்றங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விளக்கமளித்தார்.

அதே நேரம் அனுமதியில்லாது கணணிகளை வேறு நாடுகளில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்தல், கொள்வனவு செய்தல் போன்றவற்றால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் டெல் நிறுவனத்தின் வியாபார முகாமையாளர் ஷெஹான் மனதுங்க விளக்கமளித்தார். டெல் கணினிகள், டெல் உற்பத்திகள் தொடர்பிலும் கருத்துக்கள் பகிரப்பட்டன.

மேலும், இலங்கையில் டெல் கணினி உற்பத்திகளை விற்பனை செய்து வரும் சம்சூங் ஐ.டி நிறுவனத்தினர் தம்முடைய அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் ஊடாகவே கணினிகளை விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் கிழக்கு மாகாணத்துக்கான அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளராக மட்டக்களப்பிலுள்ள மஹ்சார் நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இவ் அறிமுக நிகழ்வின் போது மஹ்சார் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.சீ.எம்.அமானுல்லா, முகாமையாளர்கள், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

IDC (International Data Corporation )
கடந்த வருட அறிக்கையின் படி கணினிப் பாவனையில் உலகில் முதல் இடத்தில் தற்போது இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X