2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

முன்பள்ளி ஆசிரியர்கள், முதனிலை முன்பள்ளிகளுக்கு விஜயம்

George   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள 30 முன்பள்ளி ஆசிரியர்கள், முன்மாதிரி முதனிலை முன்பள்ளிகளுக்கு அழைத்து செல்லப்பட்டதாக பட்டிருப்பு கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் நல்லதம்பி புவனசுந்தரம் தெரிவித்தார்.

யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் சிறந்த கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அமைவாக இந்த விஜயம் அமைந்ததாக அவர் கூறினார்.

இதன்போது, பட்டிருப்பு கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் நல்லதம்பி புவனசுந்தரம், ஆசிரியர் மத்திய நிலைய இணைப்பாளர் எஸ்.கிருபாகரன், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் தங்கேஸ்வரி சபாரெட்ணம் ஆகியோரும் முப்பது முன்பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X