2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம்

George   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (12) மாவட்டச் செயலாளரும் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுத் தலைவருமான சறோஜினிதேவி சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்டத்தின் சிறுவர் அபிவிருத்தி சம்பந்தமான கடந்த கால வேலை திட்டங்களின் முன்னேற்றம், பெற்றோரிடமிருந்து பிரிந்த சிறார்களைத் தேடுதலும் மீளிணைத்தலுக்குமான புதிய பிரிவு ஒன்றை நன்னடத்தைத் திணைக்களத்தின் கீழ் தாபித்தல், மாவட்டத்திலுள்ள சிறுவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன் மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் வி. குகதாசன், நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி எஸ். சுதிர்ஸ்னர், யுனிசெப் நிறுவனத்தின் சிறுவர் பாதுகாப்பு ஆலோசகர் பி.ரவிச்சந்திரன், பிரதேச செயலாளர்கள், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சிறுவர் நலன் காக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X