2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பண்புசார் விருத்தி மதிப்பீடு செயலமர்வு

Gavitha   / 2014 செப்டெம்பர் 13 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


 மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள பாடசாலை மாணவர்களது பண்புசார் விருத்தி தொடர்பாக மதிப்பீடு செய்யும் முறைகுறித்து கல்வித்துறைசார் அதிகாரிகளுக்கான இரண்டு நாள் செயலமர்வு வியாழன்,வெள்ளிக்கிழமைகளில் (11,12) நடைபெற்றது.

மட்டக்களப்பு மத்தி வலய முகாமைத்துவத்திற்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்.இஸ்மாலெப்பை  தலைமையில் ஏறாவூர் அல் முனீறா பாலிகா மகா வித்தியாலய மண்டபத்தில் இச்செயலமர்வு நடைபெற்றது.

இதில் உதவிக் கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் கோட்டக்கல்வி அதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள பாடசாலை மாணவர்களது பண்புசார் விருத்தி தொடர்பாக மதிப்பீடு செய்யும் முறைகுறித்து விளக்கமளிக்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X