2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வேப்பவெட்டுவான் மக்களுக்கு கொள்கலன்கள் விநியோகம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 14 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான் கிராமத்தைச் சேர்ந்த 150 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தண்ணீர் கொள்கலன்கள் நேற்று சனிக்கிழமை (13) விநியோகிக்கப்பட்டன.

ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் இக்கிராம மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைய, இக்கொள்கலன்கள் வழங்கப்பட்டன.

கடந்த காலங்களில் யுத்தத்தால் முழுமையாக பாதிக்கப்பட்ட இக்கிராம மக்கள் தற்போது வரட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாக  முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பி.பிரசாந்தன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பி.பிரசாந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X