2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சூழலை அசுத்தமாக வைத்திருந்த இருவருக்கு சட்டநடவடிக்கை

Gavitha   / 2014 செப்டெம்பர் 14 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள இரண்டு பழக்கடை உரிமையாளர்களுக்கு எதிராக காத்தான்குடி பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவர்கள் அவர்களது பழக்கடை சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்காமை மற்றும் டெங்கு நுளம்பை பெருக்குவதற்கு காரணமாக இருந்தமை, என்ற குற்றச்சாட்டின் பேரில் இவ்விருவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.விதுன்ராஜ் தெரிவித்தார்.

நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு சனிக்கிழமை (13) காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள வியாரபார ஸ்தாபனங்கள் மற்றும் பலசரக்கு கடைகள், பழக்கடைகள் என்பன பரிசோதனை செய்யப்பட்டன.

இந்த பரிசோதனை நடவடிக்கையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார், இராணுவத்தினர் ஈடுபட்டனர். இதன்போதே இவ்விரு பழக்கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போத்தல்களில் நீர் நிரப்பி வைத்தமை, அங்கிருந்த டயர்களுக்குள் நீர் காணப்பட்டமை, பலசரக்கு கடைகளின் சுற்றுப்புறச் சூழலை துப்பரவாக வைத்திருக்காமை போன்ற காரணங்களை வைத்து இவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.விதுன்ராஜ் மேலும் குறிப்பிட்டார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X