2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பாசிக்குடாவில் பிரம்மகுமாரிகள் ராஜயோக தியான கலைக்கூடம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 14 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்டம், பாசிக்குடாவில் பிரம்ம குமாரிகள் ராஜயோக தியான கலைக்கூடம் சனிக்கிழமை (13) திறந்து வைக்கப்பட்டது.
இத்தியான கலைக்கூடத்தின் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கான தியான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

இந்த ராஜயோக கலைக்கூடம் திறந்து வைத்த பின்னர் பிரம்ம குமாரிகள் ராஜயோக சகோதர சகோதரிகளுக்கு ஆசிர்வாதமும் வழங்கப்பட்து.

இதன்போது பிரம்ம குமாரிகள் ராஜயோக நிலையத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பிரம்மகுமாரி கலாநிதி கஜாரியா நிர்மலா, இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பிரம்மகுமாரன் கணேஷ் மகாலிங்கம், முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான எஸ். சந்திரகாந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பி. பிரசாந்தன், மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினர், கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ். சிஹாப்தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X