2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கிராம உத்தியோகஸ்தர்களின் அலுவலகங்கள் கண்காணிப்பு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 14 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு, மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகங்களுக்குட்பட்ட கிராம சேவை உத்தியோகஸ்;தர்களின் அலுவலகங்கள் முகாமைத்துவ முறைப்படி இயங்குகின்றதா என்பதை கண்காணிக்கும் முகமாக பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் நேரடியாக சென்று பார்வையிட்டு வருகின்றார்.

அந்த வகையில், நேற்று சனிக்கிழமை (13) குறுமண்வெளி கிழக்கு 114 பிரிவு கிராம சேவை உத்தியோகஸ்;தர்  அலுவலகம் பார்வையிடப்பட்டதுடன், அங்குள்ள குறைநிறைகளை நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனைகளை பிரதேச செயலாளர் வழங்கினார்.

கிராம சேவை  உத்தியோகஸ்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவப்போட்டி அண்மையில் இடம்பெறவுள்ளதால்,  இதற்கு தயார்படுத்தும் வகையிலும் மற்றும் கிராம சேவை உத்தியோகஸ்தர்களின் அலுவலகம் சிறந்த முறையில் இயங்குவதன் மூலம் மக்கள் தங்குதடையின்றி சேவையை  பெற்றுக்கொள்வதற்கு இது வழிசமைக்கும் என்றும் எதிர்பார்ப்பதாக மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலாளர்  எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X