2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 15 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் கடந்த வாரம் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, காத்தான்குடி பிரதேசத்தில் சிறுவர் கண்காணிப்பு மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வூட்டும்  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், காத்தான்குடி 165ஏ கிராம உத்தியோகஸ்தர்  பிரிவில் விழிப்புணர்வூட்டும்  கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (14) மாலை  நடைபெற்றது.  இதில் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சிவில் பாதுகாப்புக் குழுவினர், கிராம சேவை உத்தியோகஸ்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சமூகச் சீர்கேடுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவதென்பது தொடர்பிலும்  தொலைபேசிப் பாவனை, போதைப்பொருளுக்கு இளைஞர்கள் அடிபணிந்துள்ளமை தொடர்பிலும்; கடைத்தெருக்கள், வீதிகள்,  பிரத்தியேக வகுப்புக்கள், இரவு நேர குர்ஆன் மதரசாக்கள் ஆகியவற்றுக்கு சிறுவர்கள் செல்லும்போதும் உறவினர்கள், அயலவர்களுடன் சிறுவர்களை விட்டுச் செல்வது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டன.

மேலும், பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் தங்களது பிள்ளைகளை  உன்னிப்பாகக் கவனிப்பது  தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.

எதிர்வரும் 19ஆம் திகதி கூடுதலான மக்களை அழைத்து   இது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துவதற்கு  தீர்மானிக்கப்பட்டது.

காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி எஸ்.சில்வா, பொலிஸ் அதிகாரிகளான எம்.முஐhஹித், கே.விமலாதேவி கிராம சேவை  உத்தியோகஸ்தர் எச்.எம்.அஸ்ஹர், சமூக மேம்பாட்டுக்கான அமைப்பின் பணிப்பாளரும் சிவில் பாதுகாப்புக்குழுவின் தலைவருமான எம்.ஹாரிஸ் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X