2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

களியாட்டத்தில் கூடாரங்கள் கழன்று விழுந்ததால் நால்வர் காயம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 15 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, கல்லடி சிவானந்தா வித்தியாலய மைதானத்தில்  நடைபெற்ற களியாட்டத்தின்போது கூடாரங்கள் கழன்று விழுந்ததால், காயமடைந்த சிறுவன் ஒருவன் உட்பட 04 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வித்தியாலய மைதானத்தில் பிரபல பால்மா நிறுவனத்தால் களியாட்டம் ஞாயிற்றுக்கிழமை (14) நடத்தப்பட்டது. இதன்போது, பரிசுப்போட்டிகள் வைக்கப்பட்டு வெற்றி பெற்றவர்கள் ஹெலிகொப்டரில் ஏறிப் பயணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

குறித்த ஹெலிகொப்டர் மைதானத்தில் ஏறி, இறங்கும்போது ஏற்பட்ட காற்றினால் மைதானத்தில்  கட்டப்பட்டிருந்த கூடாரங்கள் கழன்று விழுந்தததாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X