2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கண்காட்சி

Gavitha   / 2014 செப்டெம்பர் 15 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் 

மட்டக்களப்பு, களுதாவளை வீனஸ் முன்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து  ஏற்பாடு செய்த  கண்காட்சி திங்கட்கிழமை (15) காலை களுதாவளை வீனஸ் முன்பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கண்காட்சிக் கூடத்தை, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

களுதாவளைக் கிராமத்தில் வீனஸ் முன்பள்ளி ஆரம்பிக்கப்பட்டு நான்கு வருட நிறைவையொட்டி  மாணவர்கள், ஆசிரியர்கள்  மற்றும் பெற்றோர்களின் கைவண்ணத்தில் இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இக்கண்காட்சி, மணவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளதென வீனஸ் முன்பள்ளியின் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
 
இந்நிகழ்வில்,  பட்டிருப்புக் கல்விவலய பாலர் பாடசாலைகள் மேலதிக உதவிக் கல்விப் பணிப்பாளர் என்.புவனசுந்தரம், மண்முனை தென் எருவில் பற்று முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி.அருந்ததி சீவரெத்தினம், மட்.களுதாவளை மகாவித்தியாலய அதிபர் ரி.அலோசியஸ், வைக்றோ அரச சார்பற்ற அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ரி.அல்பிரட் எரோஜன், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X