2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 16 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்


வேலையற்ற பட்டதாரிகள் சிலர் மட்டக்களப்பு நகரிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (16)  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

31.12.2011 பட்டப்படிப்பை முடித்து வெளியேறிய பட்டதாரிகளுக்கு இதுவரையில் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லையென்பதுடன், இதே வருடத்தில்; தங்களுடன் பட்டப்படிப்பை முடித்து பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறிய பட்டதாரிகளுக்கு அரச தொழில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. தங்களுக்கான அரச நியமனங்கள் உடனடியாக வழங்கப்படவேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

'ஜனாதிபதி அவர்களே எங்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத்தாருங்கள்', 'மிக விரைவில் நியமனம் வேண்டும்', 'தொழில் இல்லாமல் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் நாம்', 'எமக்கு குரல் கொடுக்க எவருமில்லை' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை இவர்கள் தாங்கியிருந்தனர்.

இதன்போது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் மட்டக்களப்பு மவாட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனிடம் கையளிக்கப்பட்டது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X