2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விபத்தில் கடற்படையினர் நால்வர் காயம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 18 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


வாகரை, கஜுவத்தையிலுள்ள கடற்படையினரின் வாகனம் ஒன்று  மட்டக்களப்புக்கு சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டமாவடி பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில்; படுகாயமடைந்த  4 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று  வியாழக்கிழமை (18) இடம்பெற்றுள்ள இந்த விபத்தில் படுகாயமடைந்த கடற்படை வீரர்கள் 4 பேரும் உடனடியாக  வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், இவர்களில்  இருவரின் நிலைமை மோசமாக இருப்பதினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக  வாழைச்சேனை வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடற்படை வாகனத்தில்  ஏற்பட்ட இயந்திரக்கோளாறே இந்த விபத்துக்கு  காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X