2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

George   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல்-சக்திவேல்



மட்டக்களப்பு  காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான்குளம் பிரதான் வீதியை மறித்து பிரதேசமக்கள் இன்று சனிக்கிழமை(20) காலை ஆரப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.

கடந்த 16ஆம் திகதி அதிகாலை கிரான்குளம் சந்தியில் நடந்த வாகன விபத்திற்கு காரணமான வான் சாரதியை கைது செய்யுமாறு கோரியே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும், சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் உயிரிழந்தவருக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டடோர் கோரிக்கை விடுத்தனர்.

இதன் போது மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியை மறித்து வீதியில் பெருமளவிளான ஆண்கள் பெண்கள் பொதுமக்கள் அமர்ந்து, சுலோகங்களை தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைடுத்து குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டதுடன் ஆரப்;பாட்ட இடமத்திற்கு விரைந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து வாகனப் போக்குவரத்து சீரானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்ட இடத்திற்கு விரைந்த காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிகுடிக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

குறித்த விபத்துக்கு காரணமாக இருந்த சாரதியை கைது செய்துள்ளதுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதுடன் நீதிமன்றத்தினால் சந்தேக நபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கூறினர்.

தொடர்ந்து விசாரணைகள் இது தொடர்பில் இடம் பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தனர்.

எனினும் குறித்த வேன் சாரதியை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக ஆர்ப்பாட்டக்காரர்களிடம் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வாக்குறுதி அளித்ததையடுத்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.

கடந்த 16ஆம் திகதி அதிகாலை 1 மணியளவில் கிரான்குளம் சந்தியில் பேசிக்கொண்டு நின்ற இளைஞர்கள் மீது, மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கிச் சென்ற வான் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் சாரதி உட்பட மூன்று பேர் காயமடைந்திருந்தனர்.

உயிரிழந்தவர் கிரான் குளத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X