2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு

Thipaan   / 2014 ஒக்டோபர் 02 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள,   தூர இடங்களிலிருந்து பாடசாலைகளுக்கு  செல்லும்  மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று (2) ஆரம்பித்துவைத்தார்.

இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில் அதிபர் எம்.ரகுபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், முதற்கட்டமாக 8 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.

ஏறாவூர்ப் பற்று மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.முருகேசபிள்ளை உள்ளிட்ட பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கடந்தகால போர்ச்சூழலால் பாதிக்கப்பட்ட வேப்பவெட்டுவான், பாலக்காடு, காரக்காடு மற்றும் மாவடிஓடை போன்ற பிரதேசங்களிலிருந்து சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரத்தை நடந்து கடந்து பாடசாலைக்கு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்படுவது கல்வி மேம்பாட்டுக்கான ஊக்குவிப்பாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X