2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மட்டு. வைத்தியசாலைக்கு புதிய நிர்வாகசபை

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 16 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குழுவுக்கான புதிய நிர்வாகசபை  தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் வைத்தியசாலைக் கேட்போர்கூடத்தில் சனிக்கிழமை (15)  நடைபெற்றது. இதன்;போதே புதிய நிர்வாகசபை  தெரிவு இடம்பெற்றது. 

இதன் தலைவராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் ராஜன் மயில்வாகனம், உப தலைவராக மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் உறுப்பினர் என்,கே.றமழான், செயலாளராக நிர்வாக உத்தியோகஸ்தர் ரி.குகராஜா ஆகியோருடன் 15 பேர் கொண்ட நிர்வாகசபை தெரிவுசெய்யப்பட்டது.

இதன்போது,  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் எம்.எப்.இப்றாலெவ்வை தெரிவிக்கையில்,

'மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு  அடிப்படைத் தேவைகளான கட்டடம், பௌதீக வளங்கள் தேவையாக உள்ளன. 

தற்போது இந்த வைத்தியசாலையில்  போதுமானளவு வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் உள்ளனர். இருந்தபோதிலும்,  இடப்பற்றாக்குறை, வைத்திய உபகரணங்கள் தேவையாகவுள்ளன. இவற்றை அனைவரினதும் ஒத்துழைப்புடன் நிறைவேற்றவேண்டும்.

இந்தக் கூட்டத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்களான டாக்டர் திருமதி எல்.எம்.நவரட்ணராஜா, டாக்டர்  திருமதி கே.கணேசலிங்கம் உட்பட அதிகாரிகள் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X