2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தபால் நிலையம் திறந்து வைப்பு

Sudharshini   / 2014 நவம்பர் 16 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் 'மஹிந்த சிந்தனையின் எதிர்கால இலக்கு' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், வாகரை தபால் நிலையத்துக்கான புதிய கட்டடம் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் வீ.விவேகானந்தலிங்கம் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக அஞ்சல் மா அதிபர் டி.எல்.பி.ரோஹன அபேரத்ன, வாகரை பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ஆர்.ராகுலநாயகி, தாபால் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் கே.கணகசுந்தரம், வாழைச்சேனை உதவிபொலிஸ் அத்தியட்சகர் எச்.ஓ.எஸ்.விதானகே, தபால் திணைக்கள உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X