2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

காத்தான்குடி அஞ்சல் அலுவலகத்துக்கு முதலாமிடம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 17 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

உலக அஞ்சல் தினத்தையொட்டி அஞ்சல் திணைக்களத்தால்  கிழக்கு மாகாணத்திலுள்ள அஞ்சல் அலுவலகங்களுக்கு இடையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட போட்டியில்,  2014ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாணத்தில் தரம் ஒன்றுக்கான சிறந்த சேவைகளை வழங்கும் அஞ்சல் அலுவலகமாக காத்தான்குடி அஞ்சல் அலுவலகம் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

இதில் இரண்டாமிடத்தை செங்கலடி அஞ்சல் அலுவலகமும் மூன்றாமிடத்தை உகன அஞ்சல் அலுவலகமும் பெற்றுக்கொண்டுள்ளன.

இதேவேளை,  சிறந்த அஞ்சல் சேவை உத்தியோகஸ்தராக திருகோணமலை அஞ்சல் அலுவலகத்தைச் சேர்ந்த ஆர்.எம்.ஜே.அஜந்தகுமார் முதலாமிடத்தையும்  காத்தான்குடி அஞ்சல் அலுவலகத்தைச் சேர்ந்த பி.சிவயோகராஜா இரண்டாமிடத்தையும்  செங்கலடி அஞ்சல் அலுவலகத்தைச் சேர்ந்த எஸ்.ரவிரஞ்சித் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

தரம் ஒன்று தபால் அதிபராக மட்டக்களப்பு அஞ்சல் அலுவலகத்தின் அஞ்சல் அதிபர் கே.கமலதாஸ் முதலாமிடததையும்  செங்கலடி அஞ்சல் அலுவலகத்தைச் சேர்ந்த அஞ்சல் அதிபர் ஏ.எல்.எம்.றியாழ் இரண்டாமிடத்தையும்  உகன அஞ்சல் அலுவலகத்தின் அஞ்சல் அதிபர் இ.எஸ்.பி.ரத்தின திலக மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

இந்தப் போட்டி பற்றிய முடிவுகள்  மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16)  நடைபெற்ற பரிசளிப்பு விழாவின்போது அறிவிக்கப்பட்டது.
இந்தப் போட்டிகள் கிழக்கு மாகாணத்திலுள்ள அஞ்சல் திணைக்களத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் நடத்தப்பட்டதாக கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் வி.விவேகானந்தாலிங்கம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X