2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கர்ப்பிணி தாய்மார்களுக்கான விஷேட பரிசோதனை முகாம்

Sudharshini   / 2014 நவம்பர் 17 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி சுகாதர அலுவலகமும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையும் இணைந்து ஏற்பாடு செய்த, கர்பிணி தாய்மார்களுக்கான விஷேட பரிசோதனை முகாம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இன்று திங்கட்க்கிழமை (17) நடைபெற்றது.

இதன்போது, மகப்பேற்று விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் எஸ்.எச்.சிறாஜினால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

 இந்த பரிசோதனை முகாமில், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ரி.கௌரிசங்கரன், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் ஆகியோரும்;; கலந்து கொண்டனர்.

இவ்விஷேட பரிசோதனை முகாமில், காத்தான்குடி மற்றும் காத்தான்குடியை அண்மித்துள்ள பிரதேசங்களிலிருந்து 300 க்கும் மேற்பட்ட கர்ப்பிணித்தாய்மாக்கள்; கலந்து கொண்டதுடன், இதன்போது, இவர்களுக்கு ஸ்கேனிங் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X