2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

அமெ. தூதுவராலய அதிகாரி காத்தான்குடிக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 18 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.சபேசன்

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் பொதுச்சேவைகள் தொடர்பு அதிகாரி  நிக்கொலி டொலிக் காத்தான்குடி நகரசபைக்கு செவ்வாய்க்கிழமை (18) விஜயம் செய்தார்.

இந்த நிலையில்,  காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் நகரசபை உறுப்பினர்களையும்  நகரசபையில்  இவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது,  காத்தான்குடி நகரசபையின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமெரிக்க தூதுவராலயத்தின் பொதுச்சேவைகள் தொடர்பு அதிகாரி நிக்கொலி டொலிக் கேட்டறிந்துகொண்டதாக காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

இந்த நகரசபைப் பிரிவில் மாணவர்களுக்கான ஆங்கிலக்கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பில் காத்தான்குடி நகரசபை எடுக்கும் முயற்சிகளுக்கு அமெரிக்கத் தூதுவரலாயம் எதிர்காலத்தில் உதவும் என்று அமெரிக்க தூதுவராலயத்தின் பொதுச்சேவைகள் தொடர்பு அதிகாரி கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், காத்தான்குடி நகரசபையால் முன்னெடுக்கப்படும்  திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பில் இவருக்கு விளக்கிக் கூறியதாக நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் காத்தான்குடி நகரசபையின் பிரதித் தலைவர் எம்.ஐ.எம்.ஜெஸீம்,  காத்தான்குடி நகரசபை உறுப்பினர்களான எச்.எம்.எம்.பாக்கீர், எம்.அலி சப்ரி, எம்.எஸ்.சியாத் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X