2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மரநடுகை நிகழ்வுகள்

Gavitha   / 2014 நவம்பர் 18 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் 


மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ், தேசிய ரீதியில் வருடாவருடம் மேற்கொள்ளப்படும் தயட்ட செவண தேசிய மர நடுகைத் திட்டத்துக்கமைவாக மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பாடசாலைகளிலும் மதஸ்தலங்களிலும் பொது இடங்களிலும் இன்று செவ்வாய்க்கிழமை (18) மரநடுகை நிகழ்வுகள் இடம்பெற்றது.

அந்தவகையில் போரதீவுப்பற்று பிரதேசசெயலகத்தின் ஏற்பாட்டில், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுசரணையுடன் மட். தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தின் அதிபர் ஏ.யோகேஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, மட்.தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தின் சுற்றாடல் கழக மாணவர்களுக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையால் தொப்பி அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக பிரதேச போரதீவுப்பற்று செயலாளர் என்.வில்வரெத்தினம், பிரதேச சுற்றாடல் உத்தியோகஸ்தர் கி.லோகராசா, கிராமசேவக உத்தியோகஸ்தர் எஸ்.சக்திவேல், வலய சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் எஸ்.ஏகநாதன், சுற்றாடல் முன்னோடி மாணவர்கள், மாதர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆலயங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, தற்போது எமது நாட்டில் 23 வீதமான காடுகளே காணப்படுகின்றன என்றும் 2020ஆம் ஆண்டை அடையும்போது 32 வீதமாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று பிரதேச செயலாளர் தெரிவித்தார். தாவரங்களே எமது ஜீவநாடிகள், இதன் மூலமே உலக இயங்குகின்றது. இதனைக் கருத்திற்கொண்டே இவ்வாறான திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து சுற்றாடல் முன்னோடி மாணவர்கள் செயற்பட வேண்டும். இதற்கு கிராமத்தின் பொது அமைப்புக்கள் கைகோர்த்து செயற்பட வேண்டும் என மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X