2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவாக ஏறாவூர் நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 21 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல் 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது முழு ஆதரவையும் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்போவதாகக் கூறி,  ஏறாவூர் நகரசபையின் மாதாந்த உத்தயோகபூர்வ அமர்வு வியாழக்கிழமை (20) நடைபெற்றபோது  விஷேட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நகரசபையின் உபதவிசாளர் எம்.ஐ.எம்தஸ்லிம் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் எம்.எல்ரெபு பாசம் பிரேரணையை முன்மொழிய உறுப்பினர் ஐ.ஏ.வாசித் வழிமொழிந்தார். அந்த உறுப்பினர்கள் அப்பிரேரணை மீதான உரை நிகழ்த்தினர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் அபிவிருத்திப் புரட்சியை ஏற்படுத்தி அனைவருக்கும் நிம்மதியை தரக்கூடிய வரவு -செலவுத்திட்டத்தை முன்மொழிந்துள்ளதுடன், பொதுமக்களுக்கு கூறமுடியாது, வெட்கப்படவேண்டியளவு மாதாந்தக் கொடுப்பனவை இதுகாலவரை பெற்றுவந்த உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவை மனநிறைவானதாக அதிகரித்துள்ளதால் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாகவும் உறுப்பினர் ரெபு பாசம் தெரிவித்தார்.

தவிசாளர் தவிர்க்கமுடியாத காரணத்தால் சபை அமர்வுக்கு  சமுகமளிக்காததை அடுத்து, உபதவிசாளர் எம்.ஐ.எம்தஸ்லிம் தலைமையில் இந்த  அமர்வை நடத்துமாறு உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து அமர்வு நடைபெற்றது.

மாதாந்த அமர்வில் உறுப்பினர்களான அமீன் இஸ்ஸத் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான ஜேஎம் முஸ்தபா, ஏ.ஆர்.பிரவுஸ் சுயேச்சைக்குழு உறுப்பினர் பீ.கஜேந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.  



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X