2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வீதி விபத்தில் இருவர் படுகாயம்

Gavitha   / 2014 நவம்பர் 22 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு நகரில் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்து போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்திய கலாநிதி எஸ். கௌசல்யா வயது (28) மற்றும்  பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம். தவராஜா வயது (57) ஆகியோரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த காரை செலுத்தி வந்த வைத்திய கலாநிதி, எதிரே சைக்கிளில் வந்துகொண்டிருந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகரை விபத்தில் இருந்து காப்பாற்ற எத்தனித்தபோது, கார் வீதியின் அருகில் உள்ள மதிலுடன் மோதியுள்ளது. இதேவேளை, எதிரே வந்தவரும் காருடன் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X