2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வீடு கையளிப்பு

Gavitha   / 2014 நவம்பர் 22 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்


ஸ்ரீ லங்கா யூத் தொண்டர் அடிப்படையிலான கிரான் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினால் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம்  கையளிக்கும் நிகழ்வு, சந்திவெளி பாலையடித்தோணாவில்  வெள்ளிக்கிழமை (21) பிரதேச சம்மேளன தலைவர் கோ.தினேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா கலந்து கொண்டார்.

அத்துடன், மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் திருமதி. கலாராணி ஜேசுதாஸ், கிரான் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் த.விந்தியன், இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் வை.குலேந்திரகுமார் மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

பாலையடித்தோணாவிலுள்ள வறுமை நிலையில் தங்களின் வாழ்க்கையை நடாத்தும் சந்திரசேகரம் சியாமளா என்பவருக்கு இவ்வீடு கையளிக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட வேண்டிய இவ்வீடு இவ்வருடமே கையளிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், ஸ்ரீ லங்கா யூத் தொண்டர் அடிப்படையிலான கிரான் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினால்  வீடமைப்புப்பணிக்கான அடிக்கல் நட்டும் வைபவம் சந்திவெளியில் பிரதேச சம்மேளன தலைவர் கோ.தினேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

வறிய நிலையிலுள்ள  குடும்பத்துக்காக வழங்கப்படும் இத்திட்டமானது, இவ்வருடம் சந்திவெளியை சேர்ந்த ச.தமேயந்தினிக்கு வழங்கப்பட்டுள்ளது.

உறுப்பினர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வீடுகள் அமைக்கும் திட்டமானது, ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டாலும் நிதி கிடைக்காமையினால் தற்போது தொண்டர் அடிப்படையில் பணம் சேகரிக்கப்பட்டு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர்,  பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகஸ்தர்களது முயற்சியால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X