2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

நீதியையும் சமாதானத்தையும் நிலைநாட்ட வேண்டும்: சேனநாயக்க

Gavitha   / 2014 நவம்பர் 22 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

இப்பிரதேசத்தில் நீதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதுடன் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு பொலிஸாருடன் இணைந்து பொதுமக்களும் செற்படவேண்டும் என களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தின் பெருங்குற்றப்பிரிவுக்கு பொறுப்பான உப பொலிஸ் பரிசோதகர் ஈ.எம்.என்.சேனநாயக்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு துறைநீலாவணை கிராமத்தில் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்குமான கலந்துரையாடல் துறைநீலாவணை விபுலானந்த வித்தியாலயத்தில் சனிக்கிழமை (22) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த முப்பது வருடகால யுத்தம் முடிவடைவதற்கு, சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களின் பங்களிப்பும் அவர்களின் வேலைத்திட்டமும் அதிகமாக இருந்தது. அதன் பயனால் தான் இன்று சமாதானம் மலர்ந்துள்ளதுடன், சிங்களம், தமிழ், முஸ்லிம் என்றில்லாது, சமாதானத்துடன் அனைத்துப் பகுதிகளுக்கும் நிம்மதியாக சென்றுவரக்கூடிய சூழல் உருவாகியிருக்கிறது.

இன்று எவ்வித பயமும் இல்லாது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் நிம்மதியாக தங்கள் பகுதிகளிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
துறைநீலாவணைக் கிராமமானது ஓர் ஏழ்மையான கிராமம். இங்கு அதிக குற்றச்செயல்கள் இடம்பெறுவது வழமை. அதனை பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து தடுக்கவேண்டும்.

அதேவேளை மதுபாவனை அதிகமாக இடம்பெறுவதுடன், குடும்பத்தில் அதிக பிரச்சினைகளும் இடம்பெற்று வருகிறது. இதற்கு காரணம் மது அருந்துவதே. இதனைக் தடுப்பதுடன் மது விற்பனை செய்யப்படும் இடங்களை கண்டுபிடித்து சம்மந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதே என்றார்



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X