2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாருக்கு ஆதரவு?; இன்றைய கூட்டத்தில் முடிவு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 24 , மு.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று அகில மக்கள் காங்கிரஸ் இதுவரையில் முடிவு எடுக்கவில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீத் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிலைப்பாடு தொடர்பில் கேட்டபோதே, அவர் இவ்வாறு கூறினார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அதியுயர் பீடக் கூட்டம்  இன்றையதினம்  24ஆம்; திகதி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின்போதே இது தொடர்பில் ஆராயப்படும் எனவும் அவர் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலில் குதிக்கவுள்ள இரு பிரதான வேட்பாளர்களின் அரசியல் கொள்கைகள், சிறுபான்மைச் சமூகங்கள் தொடர்பான நலன், குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் நலன் இவற்றைக் கருத்திற்கொண்டு எமது கட்சி முடிவு எடுக்கும். இது தொடர்பில்  தாம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், தற்போதுள்ள ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை  தாம் அவதானித்துவருவதாகவும்  அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X