2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

இலக்கியப் பெருவிழா

Gavitha   / 2014 நவம்பர் 23 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தின் 55ஆவது வருட நிறைவையொட்டிய கவிஞர் அப்துல் காதர் லெவ்வை ஞாபகார்த்த இலக்கியப் பெருவிழா சனிக்கிழமை (22) மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தின் தலைவர் பாவலர் சாந்தி முகைதீன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் உட்பட முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள், கலை இலக்கிய வாதிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது கவிஞர் அப்துர் காதர் லெவ்வையின் 'காணாமல் போன ஒட்டகை' எனும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன்,  இலங்கையிலுள்ள பல பிரதேசங்களிலுமுள்ள  14 சிரேஷ்ட கவிஞர்கள் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் காத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தால் நடாத்தப்பட்ட கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

கவிஞர்கள், இலக்கிய வாதிகள் மதிக்கப்படல் வேண்டும். அவர்கள் தமது கலை மூலம் இந்த நாட்டுக்கு சமூகத்துக்கு சிறப்பான பணியியை செய்து கொண்டு வருகின்றனர்.

இந்த காத்தான்குடி நவ இலக்கிய மன்றமானது, பிராந்தியத்தில் ஒரு மூத்த இலக்கிய அமைப்பாகும். இதன் இலக்கியப்பணியை நான் பாராட்டுகின்றேன் என்று இவ்வைபவத்தில் உரையாற்றிய பொருளதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X