2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கல்வியும் கல்விக் கூடங்களும் : கருத்தாடல் களம்

Sudharshini   / 2014 நவம்பர் 24 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில், பூகோளமயமாகும் பொருளாதாரத்தில் கல்வியும் கல்விக் கூடங்களும் எனும் தொனிப்பொருளில்  கருத்தாடற் களம், தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கலாபூஷணம் எதிர்மன்னசிங்கம் தலைமையில் மட்டக்களப்பு நகரசபை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (23)  இடம்பெற்றது.

இன்றைய பூகோளமயமான உலகில் கல்வியின் நிலை எவ்வாறு இருக்கின்றது, அதற்காக மாணவர்கள் எவ்வாறான சவால்களை எதிர்கொண்டு வெற்றிகாண முடியும் என்பது தொடர்பில், அவுஸ்திரேலிய முர்டாஜ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அமீர் அலியினால் விளக்கமளிக்கப்பட்டது

இந்நிகழ்வில், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். பாஸ்கரன், சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ். மாமாங்கராஜா, தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், பாடசாலை மாணவ மாணவிகள், கலைஞர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X