2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

புல் வேளாண்மை ஊக்குவிப்புத் திட்டம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 25 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

புல் வேளாண்மை ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தின் கீழ்,  மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கால்நடை பண்ணையாளர்களுக்கு அரச கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தால் நல்லின புற்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில், 100 பண்ணையாளர்களுக்கு நல்லின புற்களை அரச கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் காத்தான்குடி அலுவலகம் திங்கட்கிழமை (24) மாலை வழங்கியது.

இதன்போது,  நல்லின புற்களும் நாட்டப்பட்டன.

அரச கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் காத்தான்குடி கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் துளாளி குணரட்ன தலைமையில் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  அரச கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட கால்நடை உதவி ஆணையாளர் டாக்டர் திருமதி யு.குகேந்திரன், கொக்கட்டிச்சோலை பகுதிக்கான கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.டி.மாஹிர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X