2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கஞ்சா பயிரிட்ட இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 26 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கன்னங்குடாவிலுள்ள வயல்வெளியில் கஞ்சா பயிரிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவிட்டார்.

இந்தச் சந்தேக நபர்கள் இருவரையும் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25)  ஆஜர்படுத்தியபோதே, நீதிவான்  இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கஞ்சாச்செடி பயிரிடப்படுகின்றமை தொடர்பில் தமக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, 65 மற்றும் 70 வயதுடைய இந்தச் சந்தேக நபர்களை   செவ்வாய்க்கிழமை (25) கைதுசெய்ததாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, 66 கஞ்சாச்செடிகளை கைப்பற்றியதாகவும் இந்தக் கஞ்சாச்செடிகள் வயல்வெளியில் நடப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X