2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 26 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்

தங்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரி, அடை மழைக்கு மத்தியிலும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 06 கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக புதன்கிழமை (26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கித்துள், சர்வோதய நகர், உறுகாமம், தும்பலாஞ்சோலை, கோப்பாவெளி, வெலிக்காகண்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி கிராமங்களில் காணப்படும் வீட்டு வசதியின்மை, காணிக்கான அனுமதிப்பத்திரமின்மை, குடிநீர் மற்றும் மலசலகூட வசதியின்மை, யானைத் தொல்லை, வீதி சீரின்மை ஆகிய பிரச்சினைகளை தீர்த்துத் தருமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரினர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, சீ.யோகேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர்களும்  சென்று நிலைமைகளை கேட்டறிந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்ட இறுதியில், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம், மட்டக்களப்பு மாவட்ட மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பின் தலைவி என்.வடிவேலம்மா மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத் தலைவர் ஏ.யேசுதாசன் ஆகியோர் கையளித்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X