2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

நிறுத்தல் அளவைக் கருவிகளுக்கு முத்திரை இடுதல்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 26 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் நிறுத்தல் அளவைக் கருவிகளுக்கு 2015ஆம் ஆண்டுக்கான  முத்திரை இடும் நடவடிக்கை புதன்கிழமை  (26) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிறுத்தல் அளவைக் கருவிகளுக்கு முத்திரை இடும் நடவடிக்கை, இரண்டு வாரங்களுக்கு நடைபெறவுள்ளது.

இதன்போது, அரச அங்கிகாரம் பெற்ற அனைத்து நிறுத்தல் அளவைக் கருவிகளுக்கும் முத்திரை இடப்படும் எனவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த நடவடிக்கை முற்றுப்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X