2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சமூக மட்ட விபத்துக்களை குறைத்தல்

Sudharshini   / 2014 நவம்பர் 26 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல் 

யுனிசெப் நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ், சர்வோதயம் அமைப்பு அமுல்ப்படுத்தும் இவ்வருடத்துக்கான செயற்திட்டத்தில், சமூக மட்ட விபத்துக்களை குறைத்தல் எனும் கருத்திட்டத்தின் ஒரு பகுதியாக வவுணதீவு பிரதேசத்துக்கான கலந்துரையாடல் வவுணதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று  புதன்கிழமை (26) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், சமூக மட்ட விபத்துக்களினால் இலகுவில் பாதிப்புக்குள்ளாகும் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான விழிப்புணர்வுகளை மேற்கொள்தல்,   யானைத் தாக்குதல், கிருமி நாசினிகளினால் ஏற்படும் பாதிப்பு, பாலுட்டும் தாய்மார்களின் கவலையீன்மை போன்ற விடயங்கள் தொடர்பாகவும், கிராம சேவகர் பிரிவுகளில் விழிப்புணர்வூட்டப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

வவுணதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சர்வோதய அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.மதனகுமார், திட்டம் தொடர்பாக விளக்கமளித்தார்.

 இந்நிநிகழ்வில், வவுணதீவு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி எம்.டி.நசீர், பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகஸ்தர் டி.பிரபாகரன்,  கிராம சேவகர்கள், பொருளாதார உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X