2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

விசேட தேவையுடையவர்களுக்கான உதவிகள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2014 நவம்பர் 27 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்

கிழக்கு மாகாணத்தினை தளமாக கொண்டு செயற்பட்டு வரும் கொய்நோனியா அமைப்பினால், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (26) நடைபெற்றன.

இத்திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 30 விசேட தேவையுடைய பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு, சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியில் மாடு, ஆடு மற்றும் சிறுகடைக்கான உதவிகள் வழங்கப்பட்டன.

அத்துடன், இப்பகுதியிலுள்ள விசேட தேவையுடைய 15 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் மருத்துவ தேவைகளுக்காக தலா 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கொய்நோனியா அமைப்பின் திட்ட இணைப்பாளர் திருமதி ஆர்.சரோஜினிதேவி தெரிவித்தார்.

இதேபோன்று வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் பாதிக்கப்பட்டு வறுமை நிலையிலுள்ள விசேட தேவையுடையவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கொய்நோனியா அமைப்பின் திட்ட இணைப்பாளர்களான திருமதி ஆர்.சரோஜினிதேவி மற்றும் திருமதி ஆர்.சுதாளினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X