2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

செயற்றிட்டங்கள் ஊடாக வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்

Sudharshini   / 2014 நவம்பர் 29 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

செயற்றிட்டங்களின் மூலம் வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்ப முடியும் என ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் கிழக்குமாகாணத்துக்குப் பொறுப்பான முகாமையாளர் ஈ.தர்சன்  தெரிவித்தார்.

ஐக்கியஅபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் வவுணதீவு இலுப்பையடிச்சேனை பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த இரண்டு வருட செயற்திட்டத்தின் நிறைவு நாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை (28) நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எமது செயற்திட்டமானது வவுணதீவு பிரதேச செயலாக பிரிவில் இலுப்பையடிச்சேனை, வாழைக்காலை, சின்னகாலபட்டமடு, நாவற்தோட்டம் ஆகியகிராமங்களில் 350க்கும் மேற்பட்ட குடுப்பங்களின் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி, வாழ்வாதார முயற்சியிலான பயிற்சிகள்;, சிறுவர் பாதுகாப்பு, சுகாதாரம் போன்ற செயற்திட்டத்தின் உள்வாங்கப்பட்டுள்ளன.

மேலும், தலைமைத்துவ பயிற்சி, தொழில் அபிவிருத்தி பயிற்சிகள், பெண்கள் சமத்துவம் போன்ற பல பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன்,  பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான பனையோலையிலான கைப்பணிப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி  திட்டத்தினை செயற்படுத்த கிராமமட்டத்தில் 27 பேர் கொண்ட சமூக ஒருங்கிணைப்பாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளனர்.

இச்செயற்திட்டத்தின் மூலமாக கிராமங்களில் உள்ள 1348 பேரும், ஏதாவது ஒருவிதத்திலேனும் பயனடைந்துள்ளனர் என நாம் நம்புகின்றோம்.

அத்துடன், எமது இரண்டுவருடகாலதிட்டம் நிறைவடைந்துள்ள சந்தர்பத்தில் இனிவரும் காலங்களில் இக்கிராமத்தில் தொழிற்சாலை ஒன்று அமைத்துக் கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளளோம்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X