2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சிறுவர் உரிமை விழிப்புணர்வு ஊர்வலம்

Sudharshini   / 2014 நவம்பர் 29 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்

இலங்கை பெந்தகோஸ் மட்டக்களப்பு சபையினரால் நடத்தப்பட்ட, சிறுவர் உரிமைகளை வெளிப்படுத்தும் விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பு நகரில் இன்று சனிக்கிழமை (29) இடம்பெற்றது.

மட்டக்களப்பு ஒலீவ் வீதியிலுள்ள தேவாலயத்திலிருந்து ஆரம்பமான ஊர்வலம் திருமலை வீதி, பொலிஸ் சுற்றுவட்டம், சந்தை வீதி, லெடி மெனிங் ரைவ், லொயிட்ஸ் அவனியு வழியாக மீண்டும் தேவாலயத்தை சென்றடைந்தது.

மட்டக்களப்பு சபையின் போதகர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்ஊர்வலத்தில், 'சிறுவர்களின் உரிமைகள், இயேசுவின் அற்புதங்களால் உரிமைகள் பாதுகாக்கப்படல'; போன்ற  வாசகங்கள் அடங்கிய பதாதைகளை; ஏந்திச் சென்றனர்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X