2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 01 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,கே.எல்.ரி.யுதாஜித்

டிசெம்பர் மாதம் முதலாம் திகதி உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி  மட்டக்களப்பு சிறைச்சாலையின் ஏற்பாட்டில், விழிப்புணர்வு பேரணி திங்கட்கிழமை (01) காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு முன்பாக ஆரம்பமாகிய இந்த பேரணி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைவரை சென்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.ஏ.வி.பிரியங்கர, மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் ஏ.மோகன், சிறைச்சாலை நலன்புரி உத்தியோகஸ்தர்களான  எம்.ஐ.எஸ்.சபீனா, பி.சுசிதரன், ஜே.சுதாகரன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களான பிரதிபா ஜோர்ட், ஏ.ஜே.பிரியா உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது 'உணர்ச்சிக்கு அடிமையாகதீர்கள்', 'பாதுகாப்பற்ற பாலியல் உறவை தடுப்போம்', 'எய்ட்ஸ் நோயை தடுப்போம்', 'பாலியல் உறவுக்கு முன் சிந்தியுங்கள்'  போன்ற  வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை பேரணியில் ஈடுபட்டோர்  தாங்கியிருந்தனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X