2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் கைச்சாத்து

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 01 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பொது எதிரணி கூட்டமைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் திங்கட்கிழமை (01) கைச்சாத்திட்டது.

கொழும்பு விஹாரமகாதேவி திறந்தவெளி அரங்கில்  நடைபெற்ற நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் அதன் பொதுச்செயலாளர் எம்.ஆர்.நஜா முஹம்மத் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிறுத்தியும் இந்நாட்டின் ஆட்சிமுறை மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்காகவும் ஒன்று சேர்ந்துள்ள பொது எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பிலான  அடிப்படை அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது.

இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பில் அதன் தவிசாளர் பொறியியலாளர் ஆஆ.அப்துர் ரஹ்மான், அதன் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான வட மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப், சட்டத்தரணி இம்தியாஸ், சிராஜ் மஸ்ஹூர், முஹம்மத் ஸப்றி ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X