2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'சமூக, பொருளாதார அபிவிருத்தி அனைத்திலும் பிரதிபலிக்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 02 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


சமூக பொருளாதார அபிவிருத்தியானது,  வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட கிராம மக்களின் எல்லா அம்சங்களிலும் பிரதிபலிக்கவேண்டும் என்பதுடன்,  மக்களின் பங்களிப்புடன்   அபிவிருத்திகளை மேற்கொள்ளவேண்டும் என்று சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ரீ.மயூரன் தெரிவித்தார்.

உன்னிச்சை ராஜதுரை நகர் கிராம மக்களுக்கான சமூக அணிதிரட்டலும் சமூக நலத்தயாரிப்பும் (ளுழஉயைட ஆழடிடைணையவழைn) பற்றிய பயிற்சி செவ்வாய்க்கிழமை (02) ஆரம்பிக்கப்பட்டது. இங்கு  கருத்துத் தெரிவிக்கையிலேயே  அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்

'சமூகப் பொருளாதார அபிவிருத்தியின் முதற்கட்டமாக சமூக நலத்தயாரிப்பும் சமூக அணிதிரட்டலும் (ளுழஉயைட ஆழடிடைணையவழைn) மேற்கொள்வதற்காக இந்தக் கிராமம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இன்னமும் அடுத்து வரும் மூன்று வருடங்களுக்கு சுவீடன் கூட்டுறவு நிலையம், ராஜதுரை நகர் கிராம மக்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றி இங்கு சமூக பொருளாதார அபிவிருத்திகளை மேற்கொள்ளவுள்ளது.

இயற்கை விவசாய அபிவிருத்தி, நீடித்து நிலைக்கும் வாழ்வாதாரம், வாழ்வதற்கு வசதியான இல்லம், அடிப்படை வசதிகள் எனத் திட்டங்களைத் தீட்டி, நீடித்து நிலைக்கும் பொருளாதார சமூக அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு எமது நிறுவனம் பணியாற்றி வருகின்றது.

சமுதாய மட்ட அமைப்புக்களோடு நாங்கள் இணைந்து பணியாற்றுவதற்கு, பெண்களைக் கொண்ட திறனுள்ள அமைப்புக்கள் கிராமப் பொருளாதார
அபிவிருத்தி முயற்சிகளில் பெரும் பங்காற்ற வேண்டும்.

இரசாயனமற்ற இயற்கை விவசாயமே இயற்கையோடு இணைந்த ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும். இதனையும் சுவீடன் கூட்டுறவு நிலையம் ஊக்குவிக்கின்றது. இந்த விவசாய முயற்சிகளில் பெண்கள் கூடிய அக்கறை எடுக்கவேண்டும். பொருத்தமான தொழில்நுட்ப அறிவைப் பெண்கள் பெற்றுக்கொள்வதன் மூலம் வாழ்வாதாரத்திலும் பொருளாதாரத்திலும் மாற்றங்களைக் கொண்டுவரமுடியும்.

சமூக அணிதிரட்டலுக்கூடாக சகலரையும் உள்ளடக்கியே இந்த சமூக பொருளாதார அபிவிருத்தி மேற்கொள்ளப்படுவது இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

மக்கள் தமது சமகால வாழும் சூழ்நிலைகளை நன்குணர்ந்து அதிலிருந்து மீண்டெழுவதற்கான திட்டங்களை மக்களது முழுப் பங்குபற்றுதலினூடாகவே செயற்படுத்த முடியும். மக்கள் வெறும் பார்வையாளர்களாக மாத்திரம் இருந்தால், அரசாங்கமோ அரச சார்பற்ற நிறுவனங்களாலோ சமூக பொருளாதார அபிவிருத்தியைக் கொண்டு வரமுடியாது' என்றார்.

இந்நிகழ்வில் சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் திட்ட உதவியாளர் எம்.ஜெயசீலன், தொழில்நுட்ப உதவியாளர் ஜெயரவி, வெளிக்கள கண்காணிப்பு உதவியாளர் ஏ. அருள்ராஜ், பி. குகேந்திரன் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X