2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நுளம்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் களுவாஞ்சிக்குடியில் சோதனை

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 03 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல் 

மட்டக்களப்பு மாவட்டத்தின்; களுவாஞ்சிக்குடி பிரதேத்தில் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (02) சோதனை மேற்கொள்ளப்பட்டது.

களுவாஞ்சிக்குடி பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர்
விளையாட்டுக்கழகத்தினர் எனப் பலரும் இணைந்து இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். 

இதன்போது கடைகள், கிணறுகள், வடிகான்கள் போன்றவை சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன்,  நுளம்புகள் பரவுவதற்கு ஏதுவான சூழலை வைத்திருந்தவர்களுக்கு  வழக்குகள் பதியப்பட்டும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டன.

அந்த வகையில், டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு ஏதுவான சூழலை வைத்திருந்த  அரச திணைக்களங்கள் அடங்கலாக 12 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் 6 பேருக்கு எச்சரிக்கை கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், களுவாஞ்சிக்குடி பிரதேச பொதுச் சுகாதார  பரிசோதகர் எஸ்.ரவிகரன் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X