2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'தமிழர் தலைவிதியை தமிழரே தீர்மானிக்கும் சந்தர்ப்பமாக தேர்தலை பார்க்கிறோம்'

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 04 , மு.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்

தமிழரின் தலைவிதியை தமிழரே தீர்மானிக்கின்ற சந்தர்ப்பமாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தாம் பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதி அமைப்பாளர் ஏ.ரி.மாசிலாமணி தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதி அமைப்பாளர் ஏ.ரி.மாசிலாமணியிடம் புதன்கிழமை (03) கேட்டபோதே இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

' பேதங்களை மறப்போம், ஒன்றுபடுவோம், மாற்றத்தை கொண்டுவருவோம்' என்ற எமது மகுட வாக்கியத்தை கருத்திற்கொண்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வோம். எம்மவர்கள் மத்தியில் எந்தவித பேதங்கள் காணப்படினும், அவற்றை களைந்து ஒற்றுமையுடன் மாற்றத்தை கொண்டுவரவுள்ளோம்.

தமிழரின்  தலைவிதியை தமிழரே தீர்மானிக்கின்ற சந்தர்ப்பமாக எதிர்வரும்  ஜனாதிபதித் தேர்தலை நாம்; பார்க்கிறோம். எமது மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தை நல்லமுறையில் பயன்படுத்தவேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிட்டால், இதுபோன்ற  சந்தர்ப்பம் இனிமேல் கிடைக்குமோ தெரியாது.

கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் எவரும் வேண்டுமென்று சேரவில்லை. பலாத்காரமாகவே தமிழ் இளைஞர், யுவதிகள் இழுத்துச்செல்லப்பட்டனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களில்; பலர் கை, கால் இன்றி தற்போது அங்கவீனமாகியுள்ளனர். இவர்களை பற்றி நன்கறிந்தவர்கள், இந்த அரசாங்கத்தில் தற்போதுள்ளனர். இவ்வாறான அங்கவீனர்களை கூட இந்த அரசாங்கம் இதுவரையில் கவனிக்கவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள  பட்டிருப்பு தேர்தல் தொகுதியானது, இலங்கையில் பெயர் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தேர்தல் தொகுதியாகும். கடந்த ஜனாதிபதித் தேத்தலில் இத்தொகுதியில் 87.5 சதவீத வாக்குகள் அளிக்கப்பட்டன. அதுபோன்று,  எதிர்வரும் ஜனாதிபதித் தேத்தலில் பட்டிருப்புத்தொகுதியில் 90 சதவீத வாக்குகள் கிடைக்குமென்று எதிர்பார்க்கிறோம்' எனக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X