2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பாதணிகள் விநியோகிப்பு

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 04 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின்;  கிரான்குளம் பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்காக யு.எஸ்.எயிட்; நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட பாதணி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட பாதணிகள் விற்பனையாளர்களுக்கு  முதல் தடவையாக வியாழக்கிழமை (04) விநியோகிக்கப்பட்டன.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாதணி தொழிற்சாலையில்,  நாளொன்றுக்கு சுமார் 500 பாதணிகள் தயாரிக்கப்படுவதாக அதன் முகாமையாளர் ரி.நாகேந்திரா தெரிவித்தார்.

இங்கு பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் ஆண்களுக்கான பாதணிகள் என்பன உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X