2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 11 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு  மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சித்தாண்டிப் பிரதேசத்தில்; மூன்று திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இருவரை  புதன்கிழமை (10) இரவு  தாம் கைதுசெய்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவர்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்களை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

சித்தாண்டிப் பிரதேசத்திலுள்ள மூன்று இடங்களில் செவ்வாய்க்கிழமை (09) இரவு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சித்தாண்டி இராமகிருஷ்ணமிஷன் வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சீருடைகள் உட்பட பாடசாலை உபகரணங்களும் சித்தாண்டிப் பிரதேசத்திலுள்ள கோப் சிற்றியிலிருந்து சுமார் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான அரிசி, பால்மா என்பனவும் சைக்கிள் உதிரிப்பாக விற்பனை நிலையமொன்றிலிருந்து சைக்கிள் உதிரிப்பாகங்களும் திருட்டுப்போயுள்ளன.

இதனைத் தொடர்ந்து,  விசாரணை மேற்கொண்டபோது மேற்படி இருவரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

மேலும், இந்த திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 04 பேரை தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.பி.உபாலி ஜயசிங்ஹவின் உத்தரவின் பேரில் எறாவூர்; பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பிரியந்த பிறேமதிலக்கவின் வழிகாட்டலில், குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஈ.எல்.பதூர்தீன், பொலிஸ் அதிகாரிகளான ஆர்.புருஷோத்தமன், ஆர்.எம்.பண்டிதரெட்ண ஆகியோர் இவர்களை தேடிக் கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X