2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

செழிப்பான இல்லம் திட்டத்தின் கீழ் நிதியுதவி

Gavitha   / 2014 டிசெம்பர் 11 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் 

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலளர் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு, ஒரு குடும்பத்துக்கு 2,500 ரூபாய் வீதம் 7,624 குடும்பங்களுக்கு, 19,060,000 ரூபாய் நிதி புதன்கிழமை (10) வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக, போரதீவுப்பற்று பிரதேச திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர் க.உதயகுமார் தெரிவித்தார்.

திவிநெகும திணைக்களத்தினூடாக செழிப்பான இல்லம் எனும் செயற்றிட்டத்தின் கீழ் திவிநெகும பயனாளிகளுக்கு வீடு திருத்துவதற்காக ஒரு குடும்பத்துக்கு 10,000 ரூபாய் மானியமாக ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்ட நிதியாக இந்நிதி வழங்கப்பட்டுள்ளது. மிகுதிப்பணம் இம்மாத்தினுள் பயனாளிகளுக்கு, திவி நெகும வங்கிகளுடாக வழங்கப்படவுள்ளதாகவும் க.உதயகுமார் மேலும் தெரிவித்தார்.

இவற்றை விட நேற்றைய தினம், போரதீவுப்பற்று பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 40 பயனாளிகளுக்கு ஒரு குடும்பத்துக்கு 25,000 ரூபாய் பெறுமதியான நீர் பம்பிகளும், சுற்று வேலிக்குப் பயன்படும், முட்கம்பிகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இதன் ஆரம்ப நிகழ்வு புதன்கிழமை (10) மட்.திக்கோடை கணேச வித்தியாலயத்தில் நடைபெற்றது. தொடர்ந்து பழுகாமம் விபுலானந்த வித்தியாலயம், முனைத்தீவு பொதுக்கட்டிடம், பாலையடிவட்டை பொதுக் கட்டிடம் மற்றும் தம்பலவத்தை பொதுக்கட்டிடம் ஆகிய இடங்களிலும் வைத்து திவிநெகும பயனாளிகளுக்கு இவ்வுதவிகள் வழங்கப்பட்டன.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மீழ்குடியெற்றப் பிரதியமைச்சர் விநாயகமூரத்தி முரளிதரன், மற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் என பலரும் இதில் இணைந்து கொண்டு மக்களுக்கான இவ்வுதவிகளை வழங்கி வைத்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X