2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் மக்களின் பிரச்சினைகளை த.தே.கூ. அரசாங்கத்திடம் முன்வைக்கவில்லை: கிங்ஸ்லி ரணவக்க

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 15 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெளிவாக இதுவரையில் முன்வைக்கவில்லை என்று மகநெகும திட்டத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகம், மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டியில் திங்கட்கிழமை (15) திறந்துவைக்கப்பட்டது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'தமிழ் மக்களின் வாக்குகளை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெளிவாக இதுவரையில் முன்வைக்கவில்லை. தென்னிலங்கையுடன் ஒப்பிடுகையில் கிழக்கு மாகாணத்தில்  இன்னும் அபிவிருத்திகள் வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X