2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வயோதி இல்லத்தின் வைரவிழா கொண்டாட்டம்

Gavitha   / 2014 டிசெம்பர் 15 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு தாண்டவன் வெளியில் ஏழைகளின் சிறிய கன்னியர்களால் நடாத்தப்படும் வயோதிபர் இல்லத்தின் வைரவிழாக் கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை (14) இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

1954ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோன் ஜூகான் தனது சபையிலுள்ள கன்னியர்களை மட்டக்களப்புக்கு அனுப்பி இந்த இல்லம் ஆரம்பிக்கப்பட்டதாக இல்லத் தலைவி அருட்சகோதரி மரியா கிளரட் தெரிவித்தார்.

தற்போது 28 பெண்களும் 27 ஆண்களுமாக மொத்தம் 55 வயோதிபர்கள் இந்த இல்லத்தில் வைத்து பராமரிக்கப்படுவதாகக் கூறினார். இந்த ஆண்டு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட தெரிவுப் போட்டியில், சிறந்த இல்லமாக இந்த இல்லம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது. குறித்த இல்லத்தில் உள்ள வயோதிபர்களால் நடனம், வில்லுப்பாட்டு, நன்றிப் பாடல் என்பன பாடப்பட்டதோடு ஊழியர்களினால் கும்மி நடனமும் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மறைமாவட்டக் குரு முதல்வர் எப்.எக்ஸ். டயஸ், வண்ணத்துப் பூச்சிகள் சிறுவர் பூங்காப் பணிப்பாளர் அருட்தந்தை போல் சற்குணநாயகம், புளியந்தீவு புனித மரியாள் பேராலய பங்குத் தந்தை மொறயஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை 125 ஆண்டுகளாக மருதானை, டார்லி வீதியில் உள்ள ஏழைகளின் சிறிய கன்னியர்களால், வயோதிபர் இல்லம் நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X