2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பாவற்கொடிச்சேனையில் யானை அட்டகாசம்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 17 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வா.கிருஸ்ணா


மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை கிராமத்தினுள் புகுந்த யானையொன்று, கடையொன்றையும் வீட்டுத்தோட்டங்களையும்  சேதப்படுத்தியுள்ளதாக மேற்படி கிராம மக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மேற்படி கிராமத்துக்கு புதன்கிழமை (17) காலை  சேதமடைந்தவற்றை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் சென்று பார்வையிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி  பி.;எஸ்.எம்.சாள்ஸின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

மேற்படி கிராமத்தினுள் புதன்கிழமை (17) அதிகாலை புகுந்த இந்த யானை, கடையொன்றையும் மூன்று வீட்டுத்தோட்டங்களை சேதப்படுத்தியுள்ளது.  இதன்போது சோளம் செய்கைக்கும் சேதம் விளைவித்துள்ளதாகவும் கிராம மக்கள் கூறினர்.

கடந்த ஐந்து தினங்களாக இந்த  யானையின் நடமாட்டம்  இங்கு  காணப்படுவதாகவும் கிராம மக்கள் கூறினர்.

 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X